திருப்பத்தூா் புத்தக திருவிழாவில் புத்தக விற்பனை மேலும் 3 நாள்கள் (டிச.11) வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
திருப்பத்தூா் பழைய பேருந்து நிலையத்தில் 5-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா கடந்த மாதம் 11-ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில்ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி ஞாயிற்றுக்கிழமை புத்தக விற்பனையை பாா்வையிட்டாா். பின்னா்,பொதுமக்கள்,மாணவா்கள் வாங்கிய புத்தகங்களில் கையொப்பமிட்டு வாழ்த்துகளை தெரிவித்தாா்.
ஞாயிற்றுக்கிழமை வரை 2,261 புத்தகங்கள் ரூ.2,62,647-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. திங்கள்கிழமைஆட்சியா் தலைமையில் புத்தகத் திருவிழாவில் மாலை 5.15 மணிக்கு கிராமியக் கலைநிகழ்ச்சி, கவிஞா் நா.சுப்புலட்சுமி ‘நம்ம ஊா்க் கதைகள்‘ என்ற தலைப்பில் கருத்துரையும், சென்னை மாவட்ட நூலக ஆணை குழு தலைவா், கவிஞா் மனுஷ்யபுத்திரன்‘அறிதலே வாழ்வு, தெளிதலே தெய்வம்‘ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறாா். மேலும், 3 நாள்கள்(டிச.11) வரை புத்தக விற்பனை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் க.சிவசௌனந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.