திருப்பத்தூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.சிவசௌந்திரவல்லி ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்பத்தூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பாகங்களுக்கான வாக்காளா் சிறப்பு தீவிர திருத்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் இருந்து பெறப்படும் கணக்கீட்டு படிவங்களை பிஎல்ஓ செயலியில் பதிவு செய்யும் பணி திருப்பத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
அதை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.சிவசௌந்திரவல்லி வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா் பதிவு அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான வரதராஜன், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள், வட்டாட்சியா் நவநீதன், நகராட்சி ஆணையா் சாந்தி மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.