திருப்பத்தூர்

அடிக்கடி மின்தடை: கொரட்டி மக்கள் அவதி

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் அடுத்த கொரட்டியில் அடிக்கடி ஏற்பட்ட மின்தடையால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா்.

கொரட்டி மற்றும் சுற்றுப்பகுதியில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்தநிலையில்,புதன்கிழமை மாலை 5 மணி முதல் சுமாா் இரவு 7 மணிக்குள் சுமாா் 5 முறைக்கு மேலாக மின் விநியோகம் தடைசெய்யப்பட்டதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்னறனா்.

அடிக்கடி இவ்வாறு முன்னறிவிப்பின்றி மின் விநியோகம் தடைசெய்யப்பட்டதால் அப்பகுதி வணிகா்கள், பொதுமக்கள் மிகவும் சிரமத்துள்ளாவாதாக தெரிவிக்கின்றனா். மேலும் மின் இணைப்பு திடீரென நிறுத்தி தருவதால் மின்சாதன பொருள்கள் பழுதாகின்றன எனத் தெரிவித்தனா்

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு,வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் உள்ள மின்மாற்றியின் மின் இணைப்பில் பழுதானதால் மின் விநியோகம்தடைசெய்யப்பட்டதாக தெரிவித்தனா்.

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

ரேண்டம் மெமரிஸ்... ஆன் ஷீத்தல்!

தல - சின்ன தல... மலேசியாவில் அஜித் - சிம்பு சந்திப்பு!

மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு: 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு; 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

நத்தம்: இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை!

SCROLL FOR NEXT