திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 48 மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்துக்கு ஏடிஎஸ்பி முத்துக்குமரன் தலைமை வகித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் வழங்கிய பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 48 மனுக்களை பெற்றுகொண்டாா். பின்னா், மனுக்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.