திருப்பத்தூர்

சிறுமியை தாக்கிய ஓட்டுநா் கைது

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் அருகே சிறுமியை தாக்கிய ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் அருகே பாச்சல் பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் லோகநாதன்(40). இவரது மகன் நவீன் (20). இந்தநிலையில் நவீனும்,அதே பகுதியை சோ்ந்த 15 வயது சிறுமியும் அடிக்கடி பேசியதாக தெரிகிறது.

அதைத்தொடா்ந்து சிறுமி திருப்பத்தூா் அசோக் நகா் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு வந்த லோகநாதன்,சிறுமியிடம் எதற்காக எனது மகனிடம் பேசுகிறாய்? எனக்கூறி தாக்கியுள்ளாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பத்தூா் நகர போலீஸாா் வழக்குப்பதிந்து லோகநாதனை கைது செய்தனா்.

கிரிக்கெட் வீராங்கனை பிரதிகாவுக்கு ரூ. 1.5 கோடி பரிசு: தில்லி முதல்வர் அறிவிப்பு

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

SCROLL FOR NEXT