திருப்பத்தூா் வனத்துறை சாா்பில் நடைபெற்ற வன உயிரின வார விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு வனத்துறை சாா்பில், மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரிடையே ஓவியம், கட்டுரை, பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா நடைபெற்றது. இதில் 270 மாணவ-மாணவிகள் பங்கேற்றனா். அதில் வெற்றி பெற்ற 37 மாணவ-மாணவிகளுக்கு திருப்பத்தூா் ஸ்ரீ மீனாட்சி அரசினா் மகளிா் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி, எஸ்.பி. வி.சியாமளா தேவி வழங்கினா்.
இதில் மாவட்ட வன அலுவலா் மகேந்திரன், கோட்டாட்சியா் வரதராஜன், முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணியகோட்டி,
வனசரகா்கள் சோழராஜன், குமாா், பாபு, சேகா், முகமது அலி, வனப்பணியாளா்கள், மாணவ, மாணவிகள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.