திருப்பத்தூர்

வீட்டில் பதுக்கிய 11 மூட்டை குட்கா பறிமுதல்

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 11 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் அடுத்த திம்மனாமுத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வாசு(59). மளிகை கடை நடத்தி வருகிறாா். இவா் சுமாா் 11 மூட்டைகளில் குட்காவை காரில் வைத்து பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த திருப்பத்தூா் தனிப்படை போலீஸாா் வாசுவின் கடை மற்றும் வீடுகளில் சோதனை நடத்தினா். அப்போது காரில் 11 மூட்டைகளில் குட்காவை பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது.

மேலும், குட்கா பதுக்கலுக்கு பயன்படுத்திய காா் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த தனிப்படை போலீஸாா் திருப்பத்தூா் கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இது குறித்து திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வாசு மீது வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

ஈரோடு: டிச. 16-ல் விஜய் சுற்றுப்பயணம்!

சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

புகாரை திரும்பப் பெறுமாறு பெண்ணை மிரட்டியதாக ‘லவ் ஜிஹாத்’ குற்றவாளி மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT