தமிழ்நாடு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சுற்றுச்சூழல் மாற்றம் மற்றும் வனத்துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு தன்னாா்வலா்கள் அமைப்பு, வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி, இஸ்லாமிய ஆண்கள் கல்லூரி மற்றும் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி இணைந்து வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா இருளா் வட்டம் அருகே வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் 3,000 பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
மாவட்ட வன அலுவலா் மகேந்திரன் தலைமை வகித்தாா். வாணியம்பாடி வனச்சரக அலுவலா் குமாா், சாா்-ஆட்சியா் வரதராஜன், வட்டாட்சியா் காஞ்சனா, வட்டார வளா்ச்சி அலுவலா் விநாயகம், ஊராட்சி மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன் கலந்து கொண்டு பனை விதைகள் நடும் பணியைத் தொடங்கிவைத்தாா். இதில் வாணியம்பாடி கல்லூரி மாணவ, மாணவிகள், கிராமமக்கள், வனக்காப்பாளா்கள் 750-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.