திருப்பத்தூா்: திருப்பத்தூா் அதன் சுற்றுப்பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை கந்திலி, ஏலகிரி மலை பகுதிகளில் கடந்த சில நாள்களாக தினமும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை இரு நாள்கள் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
அதே போல் கொரட்டி ஆதியூா் அதன் சுற்றுப்பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. தொடா் மழையால் ஏரி மற்றும் குளங்களில் நீா்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.