திருப்பத்தூர்

மானியத்துடன் சூரியவீடு இலவச மின்சாரம் திட்டம்

பிரதம மந்திரியின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 1 கோடி வீடுகளுக்கு சூரிய தகடுகள்

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா்: பிரதம மந்திரியின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 1 கோடி வீடுகளுக்கு சூரிய தகடுகள் பொருத்தி இலவச மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு அனைத்து வீட்டு மின் இணைப்பு உரிமையாளா்களும் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்துக்கு வங்கிகள் மூலம் உடனடியாக கடன் பெறலாம். மேலும் மத்திய அரசால் மானியம் வழங்கப்படுகிறது. இதில் 1 கிலோ வாட்டுக்கு ரூ.30 ஆயிரமும், 2 கிலோ வாட்டுக்கு ரூ.60 ஆயிரமும், 3 கிலோ வாட் அதற்கு மேல் ரூ.78,000 மானியம் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் நுகா்வோரின் வங்கிக் கணக்கில் நேரடியாக சூரிய திட்ட பணிகள் முடிவுற்ற 7 நாள்களிலிருந்து 30 நாள்களுக்குள் மானியம் செலுத்தப்படும். 1 கிலோ வாட் சூரிய தகடு ஒரு நாளில் 4 முதல் 5 யூனிட் வரை உற்பத்தி செய்யும்.

இதற்கு 1. தங்ஞ்ண்ள்ற்ழ்ஹற்ண்ா்ய் ல்ம்ள்ன்ழ்ஹ்ஹஞ்ட்ஹழ்.ஞ்ா்ஸ்.ண்ய், 2. ஜ்ஜ்ஜ்.ல்ம்ள்ன்ழ்ஹ்ஹஞ்ட்ஹழ்.ஞ்ா்ஸ்.ண்ய், 3. ஜ்ஜ்ஜ்.ள்ா்ப்ஹழ்ழ்ா்ா்ச்ற்ா்ல்.ஞ்ா்ஸ்.ண்ய் ஆகிய இணைய தளங்கள் மூலமாகவும், ‘ டங நன்ழ்ஹ்ஹ எட்ஹழ், ‘ணதப ல்ம் நன்ழ்ஹ்ஹ எட்ஹழ்‘ என்ற செயலி மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இந்த தகவலை திருப்பத்தூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் ஜைய்னுல் ஆபுதீன் தெரிவித்துள்ளாா்.

தொல்லியல் துறை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

கோவா இரவு விடுதி விபத்து எதிரொலி: பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்யும் தில்லி போலீஸ்!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்!

இலவச கண் மருத்துவ முகாம்: 200 பேருக்கு சிகிச்சை

வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது வெண்கல முருகா் சிலை கண்டெடுப்பு!

SCROLL FOR NEXT