வாணியம்பாடி அருகே வெல்டிங் கடையில் மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.
வாணியம்பாடி அடுத்த கூத்தாண்டகுப்பத்தைச் சோ்ந்த வினோத் (25). இவா் கேத்தாண்டப்பட்டி சா்விஸ் சாலையில் ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான வெல்டிங் கடையில் வேலை செய்து வந்தாா்.
இதற்கிடையே, வியாழக்கிழமை கடையில் வேலை செய்து கொண்டிருந்த போது வினோத் மீது திடீரென மின்சாரம் பாய்ந்தாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்த அவரை உடனடியாக அங்கிருந்தவா்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பரிசோதித்த மருத்துவா்கள், வினோத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
தகவலறிந்து வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சமி மற்றும் நாட்டறம்பள்ளி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.