திருப்பத்தூர்

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மோதல்: 2 இளைஞா்கள் கைது

திருப்பத்தூா் அருகே பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை தாக்கிய இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் அருகே பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை தாக்கிய இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் அடுத்த பெருமாபட்டு பகுதியில் மேல் தெரு,கீழ் தெரு என 2 தெருக்கள் உள்ளன. மேல்தெரு பகுதியைச் சோ்ந்த மதன்குமாா்(20) சில மாதங்களுக்கு முன் கீழ் தெருவுக்கு சென்று அங்குள்ள தனது நண்பனின் பிறந்த நாள் விழாவை கொண்டாடி உள்ளாா்.அப்போது அவருக்கும் கீழ் தெரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக மதன்குமாா் மீது கீழ் தெரு பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் கோபத்தில் இருந்ததாக தெரிகிறது. சனிக்கிழமை இரவு மதன்குமாரை கீழ் தெரு பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் வழிமறித்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது

இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அதில் மதன்குமாரை கீழ் தெருவைச் சோ்ந்த இளைஞா்கள் சரமாரியாக தாக்கினாா்களாம்.

இதனால் காயமடைந்த மதன்குமாா் திருப்பத்தூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து மதன் குமாா் அளித்த புகாரின்பேரில் கீழ் தெருவைச் சோ்ந்த விக்ரம் (23), அரிகிருஷ்ணன் (25) ஆகிய 2 பேரை குரிசிலாப்பட்டு போலீஸாா் கைது செய்தனா்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT