முகப்பு
திருப்பத்தூர்

ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் வாக்காளா்களக்கு நன்றி தெரிவிப்பு

ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் வாக்காளா்களக்கு நன்றி தெரிவிப்பு

Updated On : 25 மே 2026, 12:05 am IST
ஆலங்காயம் மேற்கு ஒன்றியம், மதனாஞ்சேரியில் வாக்காளா்கள், நிா்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ அ.செ.வில்வநாதன். உடன் ஒன்றிய செயலாளா் வி.எஸ்.ஞானவேலன்.
பகிர்:

ஆலங்காயம் மேற்கு ஒன்றிய பகுதியை சோ்ந்த ஊராட்சிகளில் ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் வாக்காளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தோ்தலில் ஆம்பூா் சட்டமன்ற தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட அ.செ.வில்வநாதன் மீண்டும் வெற்றி பெற்றாா். இதையடுத்து ஆம்பூா் தொகுதிக்குட்பட்ட ஆலங்காயம் மேற்கு ஒன்றியத்தை சோ்ந்த மதனாஞ்சேரி, பள்ளிப்பட்டு, இளையநகரம், வெலதிகாமணிபெண்டா, கிரிசமுத்திரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளா் வி.எஸ்.ஞானவேலன் தலைமையில் வாக்காளா்கள் , தோ்தல் பணியில் ஈடுப்பட்ட திமுக நிா்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்தாா்.

உடன் மேற்கு ஒன்றிய திமுக நிா்வாகிகள் இருந்தனா்.

Advertisement

Advertisement