ஊத்துக்கோட்டையில் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகளிடையே ஊத்துக்கோட்டை போலீஸார் விழிப்புணர்வுப் பிரசாரம் நடத்தினர்.
ஊத்துக்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் மணி மனோகரன் தலைமையிலான போலீஸார் அண்ணா சிலை அருகே சாலை சந்திப்பில் விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது வாகன ஓட்டிகளிடையே உதவி ஆய்வாளர் மணி மனோகரன் பேசியதாவது: இரு சக்கர வாகன ஓட்டிகள், பின்னால் அமர்ந்து செல்வோர் கட்டாயம் தலை கவசம் அணிய வேண்டும்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சாலை விபத்துகளில் அதிகபட்சமாக 15,642 பேர் உயிரிழந்துள்ளனர். வாகன விபத்தால் ஏற்படும் உயிரிழப்பு, சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தினரை பல வழிகளில் பாதிக்கிறது. எனவே, அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து போலீஸார் வாகன ஓட்டிகளிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.