திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழாவில, 10 ஆயிரம் விளக்குகளை ஏற்றி வைத்து பெண்கள் சிறப்பு பூஜை செய்தனர்.
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில் குளம் அருகே அமைந்துள்ளது தீர்த்தீஸ்வரர் கோயில். இக்கோயிலில் 8-ஆம் ஆண்டு வைகாசி விசாக திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இவ்விழாவையொட்டி, மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில், முக்கிய நிகழ்வாக கோயில் வளாகத்தில் பல்வேறு வடிவங்களில் 10,001 விளக்குகளை ஏற்றிவைத்து பெண்கள் வழிபட்டனர். இதைத்தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், திருவள்ளூர், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.