திருவள்ளூர்

குழந்தையை கொன்று, தந்தை தற்கொலை

அம்பத்தூர் அருகே குடும்பத் தகராறால் குழந்தையை கொன்றுவிட்டு, தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

DIN

அம்பத்தூர் அருகே குடும்பத் தகராறால் குழந்தையை கொன்றுவிட்டு, தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை திருமுல்லைவாயல் எஸ்.வி.டி.நகர் 5-ஆவது தெருவைச் சேர்ந்தவர் அல்லிமுத்து (38). கிணறு தூர் எடுக்கும் வேலையை செய்து வந்தார். இவரது மனைவி அனிதா. இவர்களது மகன் வினோத் (2). இந்நிலையில், அல்லிமுத்துவுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வியாழக்கிழமை மதியம் மீண்டும் தகராறு ஏற்பட்டதாம்.
இதனால், அனிதா, தனது மகனை அழைத்துக்கொணடு தாய் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது, அல்லிமுத்து, மகனை அனிதாவிடமிருந்து பறித்துக்கொண்டார். இந்நிலையில், அனிதா சென்ற பிறகு, அல்லிமுத்து மின் விசிறியில் மகனை தூக்கில் தொங்கவிட்டு கொன்றார். பின்னர், அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொணடார்.
இந்நிலையில், அனிதா மீண்டும் வீட்டுக்கு திரும்பிவந்து பார்த்தபோது, கணவரும், மகனும் தூககில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த தகவலின்பேரில், திருமுல்லைவாயல் போலீஸார் அங்கு வந்து, இருவரின் சடலத்தையும் மீட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெடி மருந்துகளை பதுக்கியவா் கைது

கொடிநாள் நிதியளிப்பது குடிமக்களின் கடமை: முதல்வர் ஸ்டாலின்

வத்தலகுண்டு அருகே கரடி தாக்கியதில் விவசாயி காயம்

லாரி உரிமையாளா்கள் வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

ஷாங்காய் நகரில் புதிய இந்திய தூதரக கட்டடம் திறப்பு! 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்..!

SCROLL FOR NEXT