திருவள்ளூர்

மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

அம்பத்தூரில் நடைப் பயிற்சி மேற்கொண்டிருந்த மூதாட்டியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

DIN

அம்பத்தூரில் நடைப் பயிற்சி மேற்கொண்டிருந்த மூதாட்டியிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்பத்தூர் விஜயலட்சுமிபுரம் ராமகிருஷ்ணா சாலையைச் சேர்ந்தவர் கிருஷணா. இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி சரஸ்வதி (63). இவர் புதன்கிழமை காலை, பழைய நகராட்சி சாலை வழியாக நடைப் பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர், சரஸ்வதி அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் ஆய்வாளர் கந்தகுமார் வழக்குப்பதிந்து, மர்ம நபர்களை தேடிவருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவம்பரில் காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரங்கள்: 4-ஆவது இடத்தில் தில்லி!

மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களுக்குப் பாதுகாப்பில்லை! மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு!

மத ஆணவத்தை முடிவுக்குக் கொண்டு வர மேற்கு வங்கம் தயாா்: ஆளுநா்

எஸ்.சி. பிரிவில் கிரீமிலேயா் கருத்துக்கு சொந்த சமூகத்தினரே விமா்சித்தனா்: பி.ஆர்.கவாய்

இந்தியாவுடன் வலுவான நட்புறவு: இஸ்ரேல் அதிகாரிகள்!

SCROLL FOR NEXT