திருவள்ளூர்

லாரி மோதியதில் பள்ளி மாணவி சாவு

செங்குன்றம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

DIN

செங்குன்றம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
செங்குன்றம் அருகே உள்ள விஜயநல்லூர் செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குருக்கான். இவருடைய மகள் சைபுநிஷா (15). இவர் சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், சைபுநிஷா தனது உறவினர் ஜமால் கமரூதீனுடன் மோட்டார் சைக்கிளில் வியாழக்கிழமை பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். பாடியநல்லூர் அருகே வந்து கொண்டிருந்தபோது, ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த சைபுநிஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜமால் கமரூதீன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து, மாதவரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

SCROLL FOR NEXT