திருவள்ளூர்

கடையை திறக்கக் கோரி மனு

திருவள்ளூர் அருகே உள்ள மெய்யூர் கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக் கடையை திறக்க வேண்டும் எனக் கோரி 30-க்கும் மேற்பட்டோர் மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்துவிடம் அண்மையில் மனு அளித்தனர்.

DIN

திருவள்ளூர் அருகே உள்ள மெய்யூர் கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக் கடையை திறக்க வேண்டும் எனக் கோரி 30-க்கும் மேற்பட்டோர் மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்துவிடம் அண்மையில் மனு அளித்தனர்.
மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் அருகே உள்ள மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த மதுபான பிரியர்கள் 30-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வந்தனர்.  அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்துவிடம் ஒரு மனு அளித்தனர். அதில் கூறப்
பட்டுள்ளதாவது:
நாங்கள் அனைவரும் தினக் கூலி வேலை செய்து வருகிறோம். தினமும் மதுகுடித்து எங்களது உடல் வலியை போக்கிக் கொள்கிறோம். எங்கள் பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை இல்லாததால், கள்ளச் சாராயம் குடிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே, மெய்யூர் கிராமத்தில் டாஸ்மாக் மதுபானக் கடையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீலக் குயில்... திவ்யபாரதி!

மீண்டும் ஆரம்பம்! சென்னைக்கு அடுத்த சுற்று மழை எப்போது? டிசம்பர் எப்படி இருக்கும்!

காற்றின் எடையும் இடையும்... ஸ்ரேயா!

சாதிவாரி கணக்கெடுப்பு: டிச. 17-ல் அனைத்துக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

சிரஞ்சீவி - நயன்தாராவின் புதிய பட பாடல்!

SCROLL FOR NEXT