திருவள்ளூர்

சாலையை சீரமைக்கக் கோரி நூதன ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி அருகே சாலையை சீரமைக்கக் கோரி, மார்க்சிஸ்ட் கட்சியினர் பட்டை நாமம் போட்டு புதன்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

கும்மிடிப்பூண்டி அருகே சாலையை சீரமைக்கக் கோரி, மார்க்சிஸ்ட் கட்சியினர் பட்டை நாமம் போட்டு புதன்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த எல்லாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்டது ஆவாஜிபேட்டை. இங்கிருந்து, மாளந்தூர் வரை சுமார் 4 கி.மீ தொலைவுக்கு ஒன்றியச் சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது.
இதனால் இந்த வழியே அரசுப் பேருந்துகள் செல்ல முடியாத நிலை உள்ளது.
மேலும் சாலையில் உள்ள சிறு பாலங்களும் இடிந்துள்ளன. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இந்நிலையில், அதிகாரிகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியினர், பட்டை நாமம் போட்டு பெரியபாளையத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.செல்வராஜ், ஜி.சம்பத், வட்டச் செயலாளர் பி.ரவி, வட்டக்குழு உறுப்பினர்கள் பி.அருள், என்.முத்து, ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

ரேண்டம் மெமரிஸ்... ஆன் ஷீத்தல்!

தல - சின்ன தல... மலேசியாவில் அஜித் - சிம்பு சந்திப்பு!

மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு: 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு; 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

நத்தம்: இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை!

SCROLL FOR NEXT