மப்பேடு கூட்டுச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகள். 
திருவள்ளூர்

மப்பேட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகள்: வாகன ஓட்டிகள் அவதி

பேரம்பாக்கம்- தண்டலம் நெடுஞ்சாலையில் மப்பேடு அருகே போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளால் தொடர் விபத்துகள் ஏற்படுகின்றன.

DIN

பேரம்பாக்கம்- தண்டலம் நெடுஞ்சாலையில் மப்பேடு அருகே போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளால் தொடர் விபத்துகள் ஏற்படுகின்றன.
பேரம்பாக்கம்- தண்டலம் நெடுஞ்சாலையில் நரசிங்கபுரம், இருளஞ்சேரி, மப்பேடு, உளுந்தை, அழிஞ்சிவாக்கம், மண்ணூர் கூட்டுச் சாலை உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளன. 
இந்த கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்களது கால்நடைகளை வீட்டில் வைத்து பராமரிக்காமல், சாலையில் திரிய விடுகின்றனர். இதனால் பேரம்பாக்கம் -தண்டலம் நெடுஞ்சாலையில் தொடர் விபத்துகள் நிகழ்கின்றன. இதனால் அதிகளவில் பாதிக்கப்படுவது இரு சக்கர வாகன ஓட்டிகளே. அவர்கள் கை, கால் முறிவால் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதாரத்தை இழக்க நேரிடுகிறது. சிலநேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
எனவே இதுபோல் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

முதலீடுகள் எல்லாம் சாதாரணமாக கிடைத்துவிடாது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT