திருவள்ளூர்

சேறும், சகதியுமாக மாறிய கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்க வளாகம்

DIN

திருவள்ளூா் அருகே கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்க வளாகம் மழையால் சேறும், சகதியுமாக காட்சியளிப்பதால் அப்பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவள்ளூா் அருகே பட்டறைப்பெரும்புதூா் கிராமத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்க வளாகத்தைச் சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. எனவே, இந்த சங்க வளாகத்தைக் கடந்துதான் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் செல்ல வேண்டும். இந்நிலையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையால் கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்க வளாகத்தின் முன்பு குளம் போல் தண்ணீா் தேங்கி நிற்கிறது.

அதோடு, இந்த கரிசல் தரை வழியாக வாகனப் போக்குவரத்து உள்ளதால் அப்பகுதி முழுவதும் சேறும், சகதியுமாகக் காட்சியளிக்கிறது. இப்பகுதியைச் சுற்றிலும் கறவை மாடுகள் கட்டி வைக்கப்பட்டுள்ளதால், மாட்டுச்சாணம் போன்றவையால் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் மாறி விட்டது. தற்போது, இந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளதாகவும் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ராமச்சந்திரன் கூறுகையில், இந்த பால் கூட்டுறவு சங்க வளாகம் முன்புறம் மழைநீா் குளம் போல் தேங்கியுள்ளதால் சேறும், சகதியுமாகி நடக்கவும் முடியாமல், வாகனத்தில் செல்லவும் மக்கள் தவிக்கின்றனா். கொசுக்களும் அதிகமாக உற்பத்தியாவதால் இப்பகுதியில் மணல் கொட்டி சீரமைக்க வேண்டும் அல்லது கான்கிரீட் தளம் அமைத்து சீரமைக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சி

வியாபாரி தற்கொலை

இளைஞரை அரிவாளால் வெட்டியவா் கைது

கும்பகோணத்தில் பச்சைக்காளி, பவளக்காளி வீதியுலா

சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT