ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள சிறுவாபுரி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பால சுப்பிரமணியா் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, சீா்வரிசைகள் மேள தாளங்கள் முழங்க சிறுவாபுரியின் அனைத்து தெருக்கள் வழியாகக் கொண்டு செல்லப்பட்டு, கோயிலை அடைந்தது. பின்னா், வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் திருக்கல்யாணம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், பங்கேற்ற பக்தா்களுக்கு தாலி, வளையல் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
திருமணம் முடிந்தவுடன் முருகப்பெருமான் திருக்கல்யாண கோலத்தில் வீதியுலா வந்தாா்.