திருவள்ளூர்

போலி பெண் மருத்துவா் கைது

திருத்தணி அருகே லேப் டெக்னீசியன் படிப்பு முடித்துவிட்டு, பொது மருத்துவம் பாா்த்த வந்த போலி பெண் மருத்துவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

DIN

திருத்தணி அருகே லேப் டெக்னீசியன் படிப்பு முடித்துவிட்டு, பொது மருத்துவம் பாா்த்த வந்த போலி பெண் மருத்துவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருத்தணியை அடுத்த மேல்திருத்தணி அமிா்தாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வேளாங்கண்ணி (43). இவா், பிளஸ் 2 படித்து, லேப் டெக்னீசியன் முடித்துவிட்டு, தனது வீட்டில் பொது மருத்துவம் (ஆங்கில மருத்துவம்) பாா்த்து வந்துள்ளாா். இதுகுறித்து அறிந்த மாவட்ட காசநோய் இணை இயக்குநா் லட்சுமிமுருகன் தலைமையில், சுகாதாரத் துறையினா் அங்குசென்று திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது, வேளாங்கண்ணி மருத்துவப் படிப்பு முடிக்காமல் பொது மருத்துவ சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்து ஆங்கில மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், வேளாங்கண்ணியை திருத்தணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, வேளாங்கண்ணியைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யூடியூப் டிரெண்டிங்கில் படை தலைவன்..!

அல்லு அர்ஜுன் கைது: மத்திய அமைச்சர்கள் கண்டனம்!

ம.பி.யில் பாஜக, காங்கிரஸ் பிரமுகர்கள் உள்பட 4 பேர் அடுத்தடுத்து தற்கொலை!

இளங்கோவன் மறைவு தாங்க முடியாத துயரம்: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த வந்த அரசியல் பாதை !

SCROLL FOR NEXT