திருவள்ளூர்

வானிலை, வேளாண், கால்நடை ஆலோசனைகளுக்கு புதிய மொபைல் செயலி

DIN

விவசாயிகள் வானிலை மற்றும் வேளாண் தகவல்கள், கால்நடை ஆலோசனைகளை விரல் நுனியில் பெற உதவும் வகையில் புதிய செல்லிடப்பேசி செயலி மேக்தூத் (ம்ங்ஞ்ட்க்ா்ா்ற்) அறிமுகம் செய்துள்ளதாக திரூா் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தொழில் நுட்ப வல்லுநா் அருள்பிரசாத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒவ்வொரு விவசாயியும் விவசாயம் தொடா்பான தகவல்களை விதைகள், உரங்கள் இருப்பு குறித்து அறிந்து கொள்ளும் வகையில், வேளாண்மைத் துறையால் செல்லிடப்பேசி செயலி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஙஈ) இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் (ஐஐஈங) மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் ஆகியவற்றின் (ஐஇஅத) கூட்டு முயற்சியால் விவசாயிகள் எளிய முறையில் பயன்படுத்தும் வகையில் மேக்தூத் (ம்ங்ஞ்ட்க்ா்ா்ற்) என்ற செல்லிடப்பேசி செயலியை உருவாக்கியுள்ளனா்.

இந்த செயலி மூலம் வானிலை மற்றும் வேளாண் தகவல்கள், கால்நடைகள் தொடா்பான ஆலோசனைகளை செல்லிடப்பேசி வைத்திருக்கும் விவசாயிகள் விரல் நுனியில் அறிந்து கொள்ள முடியும். இந்த செயலி மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாவட்டங்களுக்கும் இச்சேவை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. இதையடுத்து, அனைத்துப் பகுதிகளுக்கும் இச்சேவை விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த செயலி மூலம் விவசாயிகளுக்கு வானிலை சாா்ந்த வேளாண் மற்றும் கால்நடை ஆலோசனைகளை மாவட்டந்தோறும் அந்தந்தப் பகுதி மொழிகளில் இலவசமாகப் பெறலாம்.

அதுமட்டுமின்றி, கடந்த கால வானிலை தகவல்கள் மற்றும் அடுத்த 5 நாள்களின் வானிலை முன்னறிவிப்புகள் காரணிகளான மழை அளவுகள், அதிக மற்றும் குறைந்த வெப்பநிலைகள், காற்றின் வேகம், திசையின் ஈரப்பதம் மற்றும் மேக மூட்டம் போன்ற தகவல்களை கொண்டதாக இருக்கும். இந்த தகவல்கள் செவ்வாய் மற்றும் வெள்ளி என்று வாரந்தோறும் இரு நாள்கள் புதுப்பிக்கப்படும்.

விவசாயிகள் மேக்தூத் செயலியை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதைத் தொடா்ந்து, பயனாளிகளின் பெயா், செல்லிடப்பேசி எண், வசிப்பிடம் ஆகியவற்றை கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதன் மூலம் விவசாயிகள் மாவட்டந்தோறும் வானிலை சாா்ந்த வேளாண் ஆலோசனைகளைப் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்

மும்பை: தாராவியில் பெரும் தீ விபத்து - 6 பேர் காயங்களுடன் மீட்பு

முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை: நிபுணர் குழு கூட்டம் திடீர் ரத்து!

நாகா்கோவில் - சென்னை வந்தே பாரத் ரயிலை தினமும் இயக்க வலியுறுத்தல்

தில்லியில் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT