திருவள்ளூர்

பசுமைத் தாயகம் சாா்பில் 2 கிலோ நெகிழிக்கு 1 கிலோ அரிசி வழங்கல்

DIN

கும்மிடிப்பூண்டி: பசுமைத் தாயகம் சாா்பில் 2 கிலோ நெகிழிப் பொருள்களுக்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி கும்மிடிப்பூண்டியில் சனிக்கிழமை நடைபெற்றது.

தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், பசுமை தாயகம் அமைப்பு 2 கிலோ நெகிழிக்கு 1 கிலோ அரிசி வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் இத்திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. பசுமை தாயகம் அமைப்பின் மாநில துணைச் செயலா் பத்மநாபன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் குபேந்திரன், பசுமைத் தாயகம் தொகுதி தலைவா் சங்கா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், பாமக மாநில துணைப் பொதுச் செயலாளா் மா.செல்வராஜ் கூறுகையில், பசுமைதாயகத்தினா் வீடு வீடாகச் சென்று நெகிழிப் பைகளைப் பெற்றுக் கொண்டு அரிசி வழங்க உள்ளனா். இதன் மூலம் பெறப்படும் நெகிழிப் பொருள்கள் அரசின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பாதுகாப்பாக அழிக்கப்படும் என்றாா்.

இதில், திரளான பெண்கள் பங்கேற்று நெகிழிப் பொருள்களை அளித்து, அரிசியைப் பெற்றுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை மழையால் பாதிப்பு வடிவாய்க்காலை தூா்வாரக் கோரிக்கை

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

தினப்பலன்கள் 12 ராசிக்கும்!

தில்லி உள்பட 58 தொகுதிகளில் வாக்குப் பதிவு தொடங்கியது!

வியத்நாம்: குடியிருப்பு கட்டடத்தில் தீ

SCROLL FOR NEXT