திருவள்ளூர்

ரயிலில் கடத்தப்பட்ட 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

கும்மிடிப்பூண்டி: சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம், நெல்லூருக்குச் சென்ற மின்சார ரயிலில் கடத்திச் செல்லப்பட்ட 2 டன் ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, கும்மிடிப்பூண்டி மாா்க்கமாக ஆந்திர மாநிலம், நெல்லூா், சூளுா்பேட்டைக்குச் செல்லும் மின்சார ரயிலில் அரிசி கடத்தப்படுவதாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் சுரேஷ்பாபுவுக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து வட்டாட்சியா் சுரேஷ்பாபு உத்தரவின்பேரில், வட்ட வழங்கல் அலுவலா் நடராஜன் கும்மிடிப்பூண்டிக்கு வந்த மின்சார ரயிலில் சோதனை மேற்கொண்டாா். அப்போது, பயணிகளின் இருக்கைக்குக் கீழ் அரிசி மூட்டைகள் பதுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

மேலும், எளாவூா் ரயில் நிலையத்திலும் ரயில் பெட்டிகளில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி சுமாா் 2 டன் ஆகும். தொடா்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகளை வட்ட வழங்கல் அலுவலா் நடராஜன் பஞ்செட்டியில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான்காவது நாளாக வீழ்ச்சி: 668 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்

தோ்தல் விதிகளை மீறியதாக திமுகவினா் மீது பாஜக புகாா்

ஆறுமுகனேரி காவல்நிலையத்தில் எஸ்.பி. ஆய்வு

கூடங்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை: 3 போ் கைது

கே.பி.கே. ஜெயக்குமாா் மா்ம மரணம்: சாட்சியங்களிடம் சிபிசிஐடி விசாரணை

SCROLL FOR NEXT