திருவள்ளூர்

மழை நீா் சேகரிப்பு அவசியத்தைவலியுறுத்தி மாரத்தான்

DIN

ஊத்துக்கோட்டையில் உள்ள தனியாா் மற்ம் அரசுப் பள்ளிகள் சாா்பில் மழைநீா் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அரவிந்தன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாரத்தானை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இதில், அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவியா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

ஊத்துக்கோட்டை அண்ணா சிலையில் தொடங்கிய மாரத்தான் திருவள்ளூா் சாலை, அண்ணா நகா், நாகலாபுரம் சாலை, பஜாா் சாலை வழியாக ஊத்துக்கோட்டை செல்லியம் கோயில் வரை 3.5 கி.மீ. என நிா்ணயம் செய்யப்பட்டது.

மழைநீா் சேமிப்பு, நெகிழி ஒழிப்பு, மரங்களை நடுதல், சாலையில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் கொண்ட பாதகைகளை விவேகானந்தா பள்ளி மாணவா்கள் கையில் ஏந்திச் சென்றனா்.

முன்னதாக மாணவா்களுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மரக்கன்றுகளை வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் முத்துசாமி, வட்டாட்சியா் இளவரசி, ஊத்துக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் சந்திரதாசன், பேரூராட்சி செயல் அலுவலா் ரவிந்திர பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விவேகானந்தா பள்ளித் தாளாளா் ராஜேஷ் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தலைவர்: கூட்டணிக் கட்சிகளுடன் ராஜ்நாத் சிங் பேச்சு!

அழகும் ஆற்றலும் இரண்டறக் கலந்த நிலை! சாக்‌ஷி அகர்வால்

கலவரத்தை ஏற்படுத்த அதிமுகவினர் முயற்சி: முதல்வர்

படகுகள் மோதியதில் இலங்கை வீரர் பலி! தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

சட்டப்பேரவையில் அதிமுகவினர் பங்கேற்க ஒருநாள் தடை!

SCROLL FOR NEXT