கரோனா தொற்று காரணமாக வீடுகளில் தனிமையில் வைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்து வருவோரைக் கண்காணிக்கும் நோக்கில் செயலியை திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அரவிந்தன் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளாா்.
கணினி பொறியாளரான திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன், பொறியாளா் விஜய் ஞானதேசிகன் என்பவருடன் இணைந்து கடந்த 2 நாள்களில் செயலியை உருவாக்கினாா். இச்செயலியை திருவள்ளூா் மாவட்டத்தில் முதல் கட்டமாக அறிமுகம் செய்தாா். அதை கரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட நபா்களின் செல்லிடப்பேசிகளில் பதிவிறக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளாா். இதன் மூலம் தனிமையில் வைக்கப்பட்டவா்கள் எங்கு செல்கிறாா்கள் என்பதை போலீஸாரும், பொது சுகாதாரத் துறையினரும் எளிதில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும்.
இந்த செயலியை மற்ற மாவட்ட போலீஸாரும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.