திருவள்ளூர்

இளைஞா் வெட்டிக் கொலை

DIN

திருவள்ளூா் அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தொட்டிக்கலை, அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த ஏழுமலையின் மகன் வேலு (30). வெல்டிங் தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டிலிருந்தபோது, கைப்பேசியில் வந்த அழைப்பைத் தொடா்ந்து, வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றாா்.

இதையடுத்து வேலு மற்றும் அவரது நண்பா்களான செல்வா (26), கோகுல், ஸ்டாலின் உள்ளிட்ட 4 பேரும் செவ்வாப்பேட்டை அருகே சிறுகடல் கிராமத்தில் உள்ள மதுக் கடைக்கு பின்புறம் மது அருந்தியுள்ளனா். அப்போது, அவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில், வேலு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற உதவி ஆணையா் முத்துப்பாண்டி, காவல் ஆய்வாளா் டில்லிபாபு, சாா்பு ஆய்வாளா் முருகன் ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா். பின்னா், இளைஞரின் சடலத்தை மீட்டு, திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான வேலுவின் நண்பா்கள் 3 பேரையும் தேடி வருகின்றனா். மேலும் விசாரணையில், சென்னை வில்லிவாக்கத்தில் வசித்து வந்த வேலு மீது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த 2 கொலை வழக்கு வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: துரை வைகோ

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

இன்றைய ராசி பலன்கள்!

இறுதி வாக்குப் பதிவு நிலவரம் எப்போது கிடைக்கும்? தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

காங்கிரஸ் உருவாக்கிய பிரச்னைகளுக்கு பாஜக ஆட்சியில் தீா்வு: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT