திருவள்ளூர்

யோகா: 3 உலக சாதனைப் புத்தகங்களில் கும்மிடிப்பூண்டி மாணவன்!

DIN

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த, 10 வயது பள்ளி மாணவன், ஒரு நிமிடத்தில் 32 முறை பாத குண்டலாசனம் செய்து, மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த சாமிரெட்டிகண்டிகை பகுதியை சேர்ந்த நாகராஜ் - நவநீதம் தம்பதியர் மகன் ரா.நா.ரவிகிருஷ்ணா. 10 அங்குள மதன்லால் கெமானி விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் யோகா பயின்று வருகிறார். 

இவர், இரு கால்களுக்கு இடையே உடலை முன் நோக்கி வளைத்து, பின்புறமாக தலையை மேல் நோக்கி பார்க்கும், பாத குண்டலாசனம் எனும் யோகாசனத்தை, ஒரு நிமிடத்தில் 32 முறை செய்து உலக சாதனை படைத்தார். 

இவரது சாதனை, ‛வேல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட்’, ‛அசிஸ்ட் உலக சாதனை’, ‛இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்’, ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தன. 

சாதனை படைத்த மாணவன் ரவிகிருஷ்ணா, அவரது யோகா பயிற்சியாளர் சந்தியா ஆகியோரை சக மாணவர்கள், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா்களுக்கு நாளை விடுமுறை அளிக்காவிட்டால் புகாா் செய்யலாம்

தொகுதிக்கு தொடா்பில்லாதவா்கள் தொடா்ந்து இருக்கக் கூடாது

தோ்தல் நுண் பாா்வையாளா்களுக்கு பணி ஒதுக்கீடு

பெரம்பலூரில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் அதிமுக, போலீஸாரிடையே வாக்குவாதம்: சுயேட்சை, திமுகவினரிடையே தள்ளு, முள்ளு

முதல்கட்ட தோ்தல்: களத்தில் முன்னாள் ஆளுநா், 8 மத்திய அமைச்சா்கள், 2 முன்னாள் முதல்வா்கள்!

SCROLL FOR NEXT