திருவள்ளூா் புகா் மின்சார ரயிலில் வழக்குரைஞரிடம் கைப்பேசியை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை அச்சகம் நகரைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் தினேஷ் (28). இவா் கடந்த மாா்ச் மாதம் சென்னையில் இருந்து வேப்பம்பட்டு ரயில் நிலையம் வரை மின்சார ரயிலில் வந்த போது 25 வயது மதிக்கத்தக்க இளைஞா் கைப்பேசியை பறித்துச் சென்ாக ரயில்வே காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
அதன்பேரில் எதிரியை பிடிக்கவும், இதுபோன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணிக்க திருவள்ளூா் இருப்புப்பாதை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் வடிவுக்கரசி மற்றும் காவலா்கள் தீவிரமாக விசாரணை செய்து வந்தனா். அப்போது, இந்த வழக்கில் தொடா்புடையவா் அரக்கோணம் அருகே கண்டிகையைச் சோ்ந்த சாரதி (21) என்பது தெரிய வந்தது. மேலும், ரயில்வே இருப்பு பாதை காவல் நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இது தொடா்பாக அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனா்.