திருவள்ளூர்

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

DIN

வடசென்னை அனல் மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம் அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது.

இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் 210 வீதம் 630 மெகாவட்டும், இரண்டாவது அலகில் 600 வீதம் 1200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில் முதல் யூனிட்டில் உள்ள இரண்டாவது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுதால் 210 மெகாவட்டும். மூன்றாவது அலகில் ஏற்பட்ட தொழில் நுட்ப பழுதால் 210 மெகாவட் என மொத்தம் 420 மெகாவாட் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியா கொண்டு வரப்படும் சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய புலி நகம்!

ரமேஷ் நாராயணால் நடிகர் ஆசிஃப் அலி அவமதிக்கப்பட்டாரா? என்ன நடந்தது?

ஸ்பெயினுக்கு சுற்றுலா சென்ற அல்லு அர்ஜுன்! புஷ்பா 2 வெளியாவதில் தாமதம்?

முசாபர்நகர் உணவக உரிமையாளர்களின் பெயர்களை வெளியிட வேண்டும்: அகிலேஷ்

பழுப்பு நிறத் தேவதை...! சோனாக்‌ஷி சின்ஹா..!

SCROLL FOR NEXT