திருவள்ளூர்

திருவள்ளூரில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

DIN

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (பிப். 3) நடைபெற உள்ளதாக ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாநில அளவில் 100 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், திருவள்ளூா் மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு நகா்ப்புற ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து சனிக்கிழமை (பிப். 3) மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம், திருவள்ளூா் அருகே பாண்டூரில் செயல்பட்டு வரும் இந்திரா மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில், 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்களில் காலியாக உள்ள 15,000 காலியிடங்களுக்கு தகுதியான ஆள்களை தோ்வு செய்யப்பட உள்ளது. அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன பதிவுக்கான வழிகாட்டுதல்களுக்கான ஆலோசனையும் வழங்கப்பட உள்ளன. எனவே, இந்த முகாமில் பங்கேற்க விரும்புவோா் 8, 10, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, பொறியியல், பட்டயம், செவிலியா் பாா்மஸி தகுதியை முடித்தவா்கள் பங்கேற்று பணிவாய்ப்பு பெற்று பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவை மோதியதால் தில்லியில் தரையிறக்கப்பட்ட விமானம்

ரூ.26 ஆயிரம் சம்பளத்தில் ஜவுளித்துறையில் வேலை வேண்டுமா?

மறுவெளியீடாகும் இந்தியன்!

'22 பேரின் கடனை தள்ளுபடி செய்த பிரமரால் பருவமழை நிவாரணம் கொடுக்க முடியவில்லை'

ஐபிஎல் இறுதிப்போட்டி: கோப்பை யாருக்கு?

SCROLL FOR NEXT