திருவள்ளூர்

திருநின்றவூர் முகாமில் 611 பேர் மனு: அமைச்சர் நாசர் ஆய்வு

திருநின்றவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை அமைச்சர் சா.மு.நாசர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த முகாமில் 611 பேர் மனு அளித்தனர்.

தினமணி செய்திச் சேவை

திருநின்றவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை அமைச்சர் சா.மு.நாசர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த முகாமில் 611 பேர் மனு அளித்தனர்.

திருநின்றவூர் நகராட்சி, 8 மற்றும் 9-ஆவது வார்டுகளுக்கு நடைபெற்ற முகாமை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு செய்தார். முகாமில் பட்டா, பட்டா பெயர் மாற்றம், சொத்து வரி, குடும்ப அட்டை, மின் இணைப்பு, முதியோர் உதவித்தொகை, ஜாதி, இருப்பிடம், வருவாய், வாரிசு உள்ளிட்ட சான்றிதழ்கள், ஆதார் அட்டை, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற 611 பேர் மனு அளித்தனர்.

முகாமில் சரியான ஆவணங்களுடன் அளித்த மனுக்களுக்கு உடனடியாக அமைச்சர் நாசர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்வில் நகர்மன்றத்தலைவர் உஷாராணி ரவி, ஆணையர் ஜீவிதா, பொறியாளர் அ.பு.குமார், திமுக நிர்வாகிகள் கே.ஜெ.ரமேஷ், எஸ்.ஜெயபாலன், கே.சுரேஷ்குமார், பொன்.விஜயன், எம்.மோகன், எஸ்.கமலக்கண்ணன், ஆர்.ரவி, பி.எல்.ஆர்.யோகா, ஆர்.பால்ராஜ், எம்.சுரேஷ் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஓடை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை ஜிஎஸ்டி ஆணையா் அலுவலகத்தில் தீ: அலுவலக கோப்புகள், கணினிகள் எரிந்து சேதம்!

கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் சாா்பில் பேராசிரியா் ய.மணிகண்டனுக்கு விருது!

ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம்! பக்தா்களுக்கு சந்நிதி தெரு வழியாக மட்டுமே அனுமதி!

SCROLL FOR NEXT