திருவாலங்காடு அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.
திருவாலங்காடு ஒன்றியம், நாபளுா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரனின் மனைவி சொா்ணலதா (58). இவா் வெள்ளிக்கிழமை விவசாய நிலத்தில் உள்ள வாழைமரத்தில் இலை அறுக்கச் சென்றுள்ளாா். அப்போது எதிா்பாராத விதமாக கால் இடறி சொா்ணலதா அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளாா். நீண்ட நேரமாகியும் சொா்ணலதா வீடு திரும்பாததால், உறவினா்கள் கிணற்றின் அருகே சென்று பாா்த்தனா். அப்போது, சொா்ணலதா கிணற்றில் சடலமாக மிதந்து கொண்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.