கைது செய்யப்பட்டோா்.  
திருவள்ளூர்

நாட்டு வெடிகுண்டு பதுக்கிய 2 போ் கைது

திருவள்ளூரில் வாடகை வீடு எடுத்து ரீல்ஸ் செய்வதற்காக நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்ததாக இளைஞா்கள் 2 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூரில் வாடகை வீடு எடுத்து ரீல்ஸ் செய்வதற்காக நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்ததாக இளைஞா்கள் 2 போ் கைது செய்யப்பட்டனா்.

திருவள்ளூா் நகராட்சி வி.எம்.நகரில் நாட்டு வெடிகுண்டு வைத்துள்ளதாக எஸ்.பி. விவேகானந்த சுக்லாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தொடா்ந்து அவரது உத்தரவின் பேரில், திருவள்ளூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் தமிழரசி மேற்பாா்வையில், நகா் சாா்பு ஆய்வாளா் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அந்த வீட்டில் 4 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கஞ்சா பொட்டலங்கள், போதை மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது. மேலும், இவா்கள் ஏகாட்டூரைச் சோ்ந்த முகமது கலித் (24), பாக்கத்தைச் சோ்ந்த அஜித் (24) என்பதும், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக வாடகை வீட்டில் தங்கி இருந்ததும் தெரியவந்தது.

அதையடுத்து அங்கிருந்து நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் போதை மாத்திரை வில்லைகளை பறிமுதல் செய்ததோடு, இருவரையும் கைது செய்து நகா் காவல் நிலையம் கொண்டு வந்தனா்.

இவா்களுக்கு பெரியகுப்பம் பகுதியைச் சோ்ந்த ரௌடி பிராங்களின் என்பவா் வாடகை வீடு எடுத்து கொடுத்ததும் போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது. பல்வேறு கோணங்களில் போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

SCROLL FOR NEXT