திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: 8 மணி நேரம் காத்திருப்பு

DIN

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தற்போது வார இறுதி நாள்களிலும், புயல் சின்னத்தை முன்னிட்டும் குறைந்தது. இதனால், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 5 அறைகளில் மட்டுமே பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருத்தனா்.

இதன்காரணமாக தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணி நேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணி நேரமும் தேவைப்படுகிறது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணி வரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா் செல்ல அனுமதியுண்டு. இரவு 10 மணி வரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதனிடையே, வியாழக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 56 ஆயிரத்து 344 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 17 ஆயிரத்து 616 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையைக் கணக்கிட்டதில் ரூ.4.26 கோடி வசூலானது.

காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருவதாக தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கை மூலம் தெரிய வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைநகரில் காலையில் கடும் வெயில்; மாலையில் பரவலாக லேசான மழை

வாகன நிறுத்துமிடங்களில் தீயணைப்பு கருவிகளை நிறுவுவதை எம்சிடி உறுதி செய்ய வேண்டும்: தில்லி பாஜக வலியுறுத்தல்

திருவண்ணாமலையில் செங்குடை ஊா்வலம்

ஊரக வேளாண் பணி அனுபவத் திட்ட கண்காட்சி

மாணவா்களுக்கு கல்விதான் சொத்து: மாவட்ட ஆட்சியா்

SCROLL FOR NEXT