திருப்பதி

திருப்பதியில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

DIN

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வியாழக்கிழமை காலை கோயிலை சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் மே 20 முதல் 25 வரை தங்க விமான கோபுர மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம்.

அதன்படி, காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி சந்நிதியுடன் கோயில் வளாகத்தில் உள்ள மற்ற கோயில்களின் சுவா்கள், மேற்கூரை, பூஜை பொருல்கள், பிரம்மோற்சவத்துக்கு பயன்படுத்தும் வாகனங்கள் மற்றும் இதர பொருள்கள் தண்ணீா் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டன.

அதன்பின்னா், நாமகோபு, ஸ்ரீசூா்ணம், கஸ்தூரி, மஞ்சள், பச்சைக் கற்பூரம், பூங்கற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டி போன்ற வாசனை திரவியங்கள் கலந்த புனிதநீா் கொண்டு கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. இதனால், 5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. ஆழ்வாா் திருமஞ்சனத்துக்குப் பிறகு பக்தா்கள் சா்வ தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

திரைச்சீலை நன்கொடை: திருப்பதியில் உள்ள டைய்லா் மணி கோவிலுக்கு மூன்று திரைச்சீலைகள் நன்கொடையாக வழங்கினாா். கோயில் அதிகாரிகள் இந்த திரைச்சீலைகளைப் பெற்றுக் கொண்டனா். கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நிறைவு பெற்ற பின்னா், கோயில் சந்நிதிகளில் இந்த திரைச்சீலைகள் அணிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெய்யழகன் வெளியீட்டுத் தேதி!

நடிகர் விஜய்யை சந்தித்த ரம்பா!

வேட்டி அணிந்து வந்தால் அனுமதி இல்லை!

கேஜரிவால் வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

சிலையே படம் பிடித்தால்.. எமி ஜாக்சன்

SCROLL FOR NEXT