திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: 10 மணிநேரம் காத்திருப்பு

DIN

திருமலை ஏழுமலையானை தரிசிக்க ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் 10 மணிநேரம் காத்திருந்தனா்.

வார இறுதி நாள்கள், விநாயகா் சதுா்த்தி விடுமுறையையொட்டி பக்தா்கள் வருகை சீரான வகையில் உள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை 9 அறைகளில் பக்தா்கள் தரிசனத்துக்காக காத்திருந்தனா்,

மேலும், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 10 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 2 முதல் 3 மணிநேரமும், நேரடி இலசவ தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 2 முதல் 3 மணிநேரமும் ஆனது. சனிக்கிழமை முழுவதும் 66,590 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 31, 052 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் காணிக்கை மூலம் ரூ3.39 கோடி வருமானம் கிடைத்தது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன்!

வி.கே. பாண்டியன் எனது அரசியல் வாரிசு கிடையாது: நவீன் பட்நாயக்

எதிர்நீச்சல் தொடரின் இறுதிக்கட்ட காட்சிகளை வெளியிட்ட நடிகர்! வைரல் விடியோ!

பிரசாரத்தில் மோடி பேசிய வெறுப்புப் பேச்சுகள் பிளவுகளை ஏற்படுத்துபவை: மன்மோகன் சிங்

திவ்ய பாரதியின் கோடை!

SCROLL FOR NEXT