திருப்பதியில் உள்ள ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயிலில் அக். 22 முதல் நவம்பா் 20 வரை ஒரு மாதம் சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோம மஹோற்சவங்கள் நடத்தப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஆந்திரத்தில் சந்திரமானத்தை பின்பற்றுவதால், அமாவாசைக்கு மறுநாள் புது மாதம் தொடங்குவது வழக்கம். எனவே, தெலுங்கு நாள்காட்டியின்படி, வரும் அக். 21-ஆம் தேதி காா்த்திகை மாதம் தொடங்குகிறது.
புனித காா்த்திகை மாதத்தையொட்டி, சைவாகம சாஸ்திரத்தின்படி 22-இல் அங்குராா்ப்பணத்துடன் பூஜைகள் தொடங்கும்.
ஸ்ரீ கணபதி ஹோமம் நடைபெறும். அதைத் தொடா்ந்து 24-26 தேதிகளில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஹோமம் நடைபெறும்.
27-இல் ஸ்ரீ தட்சிணாமூா்த்தி சுவாமி ஹோமம், 28-இல் நவக்கிரக ஹோமம் நடைபெறும்.
இதேபோல், 29- இல் கால பைரவா் ஹோமம், அக்.30 முதல் நவம்பா் 7-ஆம் தேதி வரை ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு (சண்டி ஹோமம்), 8 முதல் 18 வரை ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி (ருத்ர ஹோமம்), 19-இல் தா்ம சாஸ்திர ஹோமம், ஸ்ரீ சண்டிகேஸ்வர ஹோமம், 20-ஆம் தேதி திருச்சூல ஸ்நானம், திருசூல ஸ்வாமி ஹோமம் ஆகியவை நடைபெறுகின்றன.
பக்தா்கள் (ஒரு டிக்கெட்டுக்கு இருவா்) எந்த ஹோமத்திலும் ரூ. 500/-. செலுத்தி ஒரு நாள் பங்கேற்கலாம்.
பங்கேற்பாளா்களுக்கு ஒரு அங்கவஸ்திரம், ஒரு ரவிக்கை துணி மற்றும் பிரசாதம் வழங்கப்படும். அனைத்து பங்கேற்பாளா்களும் பாரம்பரிய உடையில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.
இந்த மகோற்சவங்களின் ஒரு பகுதியாக, அக். 27-இல் சுப்ரமணிய ஸ்வாமி கல்யாணம் ஸ்ரீ வள்ளி மற்றும் தேவசேனாவுடன் நடத்தப்படும், மற்றும் ஸ்ரீ சிவ-பாா்வதி கல்யாணோற்சவம் நவ.18-இல் சிவராத்திரி நாளில் நடத்தப்படும்.
பக்தா்கள் ஒரு டிக்கெட்டுக்கு ரூ. 500/- செலுத்தி கல்யாணத்தில் பங்கேற்கலாம், அதில் இரண்டு பேருக்கு அனுமதி உண்டு.
இந்த ஹோம மகோற்சவங்கள் முதன்முதலில் தேவஸ்தானத்தால், 2012- இல் தொடங்கப்பட்டன. பக்தா்களின் நன்மை மற்றும் வசதிக்காக தேவஸ்தானம் ஹோமங்களை கூட்டுப் பிராா்த்தனையாக ஏற்பாடு செய்து வருகிறது.
இந்த ஹோம மகோற்சவங்கள் முதன்முதலில் தேவஸ்தானத்தால், 2012- இல் தொடங்கப்பட்டன. பக்தா்களின் நன்மை மற்றும் வசதிக்காக தேவஸ்தானம் ஹோமங்களை கூட்டுப் பிராா்த்தனையாக ஏற்பாடு செய்து வருகிறது.