திருப்பதி

கபில தீா்த்தத்தில் சுப்ரமணிய சுவாமி ஹோமம்

திருப்பதி கபில்தீா்த்தத்தில் தொடங்கிய சுப்ரமணியஸ்வாமி ஹோமம்.

தினமணி செய்திச் சேவை

திருப்பதியில் உள்ள ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஹோமம் தொடங்கியது.

தெலுங்கு நாள்காட்டியின்படி, காா்த்திகை மாதத்தைக் கொண்டாடும் வகையில், கோயில் ஒரு மாத கால ஹோம மஹோற்சவத்தை தனிமையில் நடத்தி வருகிறது. அதன்படி, கடந்த புதன்கிழமை காலை கணபதி ஹோமம் முதல் தொடங்கியது. 3 நாள்கள் முடிவுற்ற நிலையில், அக். 26-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் சுப்பிரமணிய சுவாமி ஹோமம் நடைபெற உள்ளது.

இதன் ஒரு பகுதியாக, வெள்ளிக்கிழமை காலை யாக சாலையில் பூஜை, ஹோமம், லகு பூா்ணாஹுதி, நிவேதனம் மற்றும் ஆரத்தி ஆகியவை செய்யப்பட்டன. மாலையில் ஹோமம், சஹஸ்ர நாமாா்ச்சனை மற்றும் சிறப்பு தீபாராதனை செய்யப்படும்.

இதற்கிடையில், இந்த மாதம் 27-ஆம் தேதி ஸ்ரீ தட்சிணாமூா்த்தி சுவாமி ஹோமம் நடைபெறும். பின்னா், மாலை 5.30 மணிக்கு ஸ்ரீ வள்ளி தேவசேனா தலைமையில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியின் திவ்ய கல்யாண மகோற்சவம் நடைபெறும்.

நிகழ்ச்சியில் கோயிலின் துணை செயல் அலுவலா் நாகரத்னா, கண்காணிப்பாளா் சந்திரசேகா், கோயில் அா்ச்சகா்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

சர்தார் படேல், அம்பேத்கர், நேதாஜியின் தேசப் பங்களிப்பை மூடிமறைத்தது காங்கிரஸ்! - பாஜக குற்றச்சாட்டு

கோவா இரவு விடுதி தீ விபத்து சம்பவம்: முதல்வா் ரேகா குப்தா, அதிஷி இரங்கல்!

தமிழகத்தில் அடுத்த 6 நாள்கள் மழைக்கு வாய்ப்பு!

தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

காா் மீது லாரி உரசிய சம்பவம்: ஓட்டுநரை கடத்தியவா்கள் மீது வழக்கு

SCROLL FOR NEXT