மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியை தாக்க முயற்சித்ததைக் கண்டித்து, வந்தவாசி வட்டார மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மங்கலம் மாமண்டூர் - கீழ்க்கொடுங்காலூர் கூட்டுச் சாலையில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்துக்குள் நுழைந்த 2 பேர் அந்தக் கட்சியின் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியை புதன்கிழமை தாக்க முயற்சித்தனர். இதனைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வந்தவாசி வட்டாரச் செயலர் பெ.அரிதாசு தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் கி.பால்ராஜ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அப்துல் காதர், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாவட்டக் குழு உறுப்பினர் யாசர் அராபத், ஓய்வு பெற்ற மின் ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் இரா.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆரணியில்...: இதேபோல ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியை தாக்க முயன்றவர்களைக் கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டது. கட்சி நிர்வாகிகள் சி.அப்பாசாமி, பெ.கண்ணன், சிவசங்கர், ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.