போளூரில் அமைந்துள்ள ஸ்ரீ சம்பத்கிரி லட்சுமி நரசிம்மர் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, புதன்கிழமை கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது.
போளூரில் பழைமை வாய்ந்த ஸ்ரீ சம்பத்கிரி லட்சுமி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நரசிம்மர் கருட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான
பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.