திருவண்ணாமலை

வைகாசி மாதப் பௌர்ணமி: திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம்

வைகாசி மாதப் பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் வியாழக்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

DIN

வைகாசி மாதப் பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் வியாழக்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இதனால், பெளர்ணமி நாளில் திருவண்ணாமலைக்கு பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரரை வழிபட்டுச்செல்கின்றனர்.
வைகாசி மாதப் பௌர்ணமி: வைகாசி மாதப் பௌர்ணமியையொட்டி, வியாழக்கிழமை மாலை 5.35 மணி முதல் வெள்ளிக்கிழமை இரவு 7.34 மணி வரை கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்து இருந்தது.
பல லட்சம் பக்தர்கள் கிரிவலம்: அதன்படி, வியாழக்கிழமை பிற்பகல் முதலே திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வரத் தொடங்கினர். மாலை 6 மணிக்குப் பிறகு கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலை வரை விடிய விடிய பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
இவர்கள் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சந்நிதிகள், ஆதி அருணாசலேஸ்வரர் கோயில், திருநேர் அண்ணாமலையார் கோயில்களில் சாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழங்குடியின கிராமத்துக்கு பேருந்து சேவை: அரசு தலைமைக் கொறடா தொடங்கிவைத்தாா்

மோசமான ராணுவ தலைவா்: ஜெய்சங்கா் விமா்சனத்துக்கு பாகிஸ்தான் எதிா்ப்பு!

அனுமதியின்றி மது விற்ற இருவா் கைது

சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுவன் உயிரிழப்பு

ஸ்ரீவிஸ்வரூப பக்த ஆஞ்சநேயா் கோயிலில் மண்டலாபிஷேகம்

SCROLL FOR NEXT