வேட்டவலம் அருகே செம்மண் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 டிப்பர் லாரிகள், கடத்தல்காரர்கள் சென்ற கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேட்டவலம் அடுத்த காட்டுமலையனூர் கிராமத்தில் இருந்து சூரியந்தாங்கல் கிராமத்துக்குச் செல்லும் சாலையில் வேட்டவலம் காவல் நிலைய போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, உரிய அனுமதியின்றி செம்மண் ஏற்றிச் சென்ற கார்ணாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் தொப்பனாளுக்குச் சொந்தமான ஒரு லாரி, அதே ஊரைச் சேர்ந்த முத்து என்பவருக்குச் சொந்தமான மற்றொரு லாரி என மொத்தம் 2 லாரிகளையும், உடன் வந்த காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து, வேட்டவலம் போலீஸார் வழக்குப் பதிந்து செம்மண் கடத்தலுக்கு உடந்தையாக காரில் வந்த கானாலபாடி கிராமம் செல்வராஜ் மகன் நேதாஜி, சோ.நம்மியந்தல் கிராமம் பாலகிருஷ்ணன் மகன் முருகையன் ஆகியோரை கைது செய்தனர். லாரி உரிமையாளர்கள் மீதும் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.மேலும், தப்பிச் சென்ற லாரி ஓட்டுநர்கள் கானலாபாடி கிராமம் ரேணு மகன் மணிகண்டன், கார்ணாம்பூண்டி கிராமம் பழனி, மாதவன் மகன் ராமச்சந்திரன் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.