அனக்காவூர் வட்டாரம், எச்சூர் கிராமத்தில் வேளாண்மைத் துறை சார்பில், நெல் வயலில் எலிகளை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடத்தப்பட்டது.
இதில் அனக்காவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி, உதவி வேளாண்மை அலுவலர் பாண்டியன் ஆகியோர் பங்கேற்று பேசியதாவது: நெல் வயலில் எலியைக் கட்டுப்படுத்த சணப்பு பூவை சிறிய துண்டுகளாக்கி, அதைப் பரவலாக ஆங்காங்கே வயலில் இட்டால், அதிலிருந்து வரும் வாசனை மூலம் எலிகளை கட்டுப்படுத்தலாம். எலிகளின் எண்ணிக்கையை குறைக்க, ஒவ்வொரு பயிர் அறுவடைக்குப் பின்பும் எலி வலைகளை பயன்படுத்தி அவற்றைப் பிடித்து அழிக்க வேண்டும். பசு சாணத்தை வயலிலும், வரப்பிலும் வைத்தால் எலித் தொல்லை குறையும் என்றனர்.
மேலும், தீவிர எலி ஒழிப்பு முறைகளை தெரிந்துகொள்ள விரும்பும் விவசாயிகள் வேலூர், விரிஞ்சிபுரம் வேளாண்மை மையத்தை தொடர்புகொண்டு பயனடையலாம் என்றனர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற முகாமில் பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர்கள் த.பெரியசாமி, ஜெ.மணிகண்டன், கு.தரணிராஜ் ஆகியோர் நெல் வயல்களில் எலிகளை ஒழிப்பது குறித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். முகாமில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.