வெம்பாக்கம் வட்டத்தைச் சேர்ந்த நாட்டேரி, செங்கத்தை அடுத்த மஷார் ஆகிய கிராமங்களில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 396 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வெம்பாக்கம் வட்டம், நாட்டேரி கிராமத்தில் நடைபெற்ற முகாமில் வெம்பாக்கம் வட்டாட்சியர் க.பெருமாள் வரவேற்றார். தலைமை வகித்த திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் ராஜஸ்ரீ, 294 பேருக்கு நலத் திட்ட உதவிக்கான சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரங்கசாமி, சுந்தரம், வட்டார மருத்துவ அலுவலர் கிருஷ்ணமணி, வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் பாண்டியன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அரிதாஸ் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
முகாமுக்கான ஏற்பாடுகளை மண்டல துணை வட்டாட்சியர் ஜெயவேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலர் அற்புதம், கிராம நிர்வாக அலுவலர்கள் வெங்கிடேசன், பழனி மற்றும் வருவாய்த் துறையினர் செய்திருந்தனர்.
மஷார்: இதேபோல, செங்கத்தை அடுத்த மஷார், கல்லரைப்பாடி, நம்மியந்தல் கிராமங்களுக்கான மனுநீதி நாள் முகாம் மஷார் கிராமத்தில் நடைபெற்றது. முகாமுக்கு செங்கம் வட்டாட்சியர் உதயகுமார் தலைமை வகித்தார். சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ரேணுகா முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் ஜெயபாரதி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட தனித்துணை ஆட்சியர் குணசேகரன் கலந்து கொண்டு 102 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார்.
இதைத் தொடர்ந்து, மருத்துவத் துறை, வேளாண்மைத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அரசு மூலம் வழங்கப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினர். முகாமில் கிராம நிர்வாக அலுவலர்கள் முகுந்தன், குணாநிதி, மாரி, சத்யா மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.