திருவண்ணாமலை

வருவாய் ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்த கட்டட மேஸ்திரி கைது

வந்தவாசி அருகே வருவாய் ஆய்வாளரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக கட்டட மேஸ்திரி கைது செய்யப்பட்டார்.

DIN

வந்தவாசி அருகே வருவாய் ஆய்வாளரைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக கட்டட மேஸ்திரி கைது செய்யப்பட்டார்.
வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி பிரபாகரன்(44). இவர், அந்தக் கிராமத்தில் உள்ள புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்தாராம். இதனையறிந்த சென்னாவரம் உள்வட்ட வருவாய் ஆய்வாளர் ஆனந்தகுமார் (45), கடந்த சில தினங்களுக்கு முன் அங்கு சென்று ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ளும்படி பிரபாகரனை எச்சரித்துவிட்டு வந்தாராம்.
இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன் செவ்வாய்க்கிழமை மாலை அதே கிராமத்தில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்குச் சென்று அங்கிருந்த ஆனந்தகுமாரிடம் தகராறு செய்தாராம். மேலும், அவரை பணி செய்ய விடாமல் தடுத்தாராம்.
இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் ஆனந்தகுமார் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸார், பிரபாகரனை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னசமுத்திரம் கிருஷ்ணா் கோயிலில் பாலாலயம்

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்: 60 போ் கைது!

5,142 ஏக்கா் சம்பா நெற்பயிா் மூழ்கியுள்ளது: திருவள்ளூா் ஆட்சியா்

உரிமையாளர் அடைய முடியாத உரிமை

செங்கம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயில் மகா கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT