திருவண்ணாமலை

ஸ்ரீரங்கராஜபுரம் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழா

வந்தவாசியை அடுத்த ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

DIN

வந்தவாசியை அடுத்த ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, செவ்வாய்க்கிழமை பகவத் அனுக்ஞை, யஜமானர் சங்கல்பம், அங்குரார்ப்பணம், வாஸ்துசாந்தி, யாகசாலை பிரவேசம், கலச ஸ்தாபனம், அஷ்டபந்தனம் சாற்றுதல், பிம்பவாஸ்து, மகாசாந்தி உள்ளிட்டவை நடைபெற்றன. தொடர்ந்து, புதன்கிழமை காலை கோபூஜை, ஹோமங்கள், மகா பூர்ணாஹுதி, கடம் புறப்பாடு உள்ளிட்டவை நடந்தன. பின்னர், காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் கோயில் நிர்வாகிகள், கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தல - சின்ன தல... மலேசியாவில் அஜித் - சிம்பு சந்திப்பு!

மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு: 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு; 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

நத்தம்: இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை!

போதைக் கோதை... மேகா சுக்லா!

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

SCROLL FOR NEXT